நாம் உயிர் வாழ முக்கிய காரணமாக இருக்கும் இதயம் உடலில் உள்ள அனைத்து இடங்களுக்கும் இரத்தத்தை செலுத்தும் பணியை செய்கிறது.உடல் செல்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டசத்துக்களை இது வழங்குகிறது.
உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளை இதயம் செய்கிறது.இதயத் துடிப்பு சீரற்று இருந்தால் நிச்சயம் உடல் உறுப்புகள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தற்பொழுது இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகளால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் இதற்கு முதன்மை காரணமாக இருந்து வருகிறது.
சிலர் இதய நோயின் இறுதி கட்டத்தை எட்டிய பிறகே மருத்துவமனைக்கு செல்கின்றனர்.இதனால் அவர்களது உயிருக்கு ஆபத்தாகிவிடுகிறது.நாம் செய்யும் பல தவறுகளால் இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதய நோய் என்பது ஆண்,பெண் என்று அனைவருக்கும் வரும் முக்கிய பாதிப்பாக இருந்து வருகிறது.நமது இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
சீரான தூக்கம் இல்லாமல் இருந்தால் இதய ஆரோக்கியம் கடுமையான பாதிப்பை சந்திக்கும்.ஆரோக்கியம் இல்லாத உணவுகளை கண்ட நேரத்தில் உட்கொள்வதால் இதய ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கிறது.
இது தவிர சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம்,உடல் பருமன் போன்ற காரணங்களால் இதய ஆரோக்கியம் சேதமடைகிறதது.மன அழுத்தம் அதிகமாக இருந்தால் இதயப் பிரச்சனை அதிகம் ஏற்படும்.
மது மற்றும் குடிப்பழக்கம் இருந்தால் இதய ஆரோக்கியம் சேதமாகும்.எண்ணெய் உணவுகள்,சர்க்கரை உணவுகள்,பதப்படுத்தபட்ட உணவுகளை அதிகளவு எடுத்துக் கொண்டால் இரத்த குழாயில் கொழுப்பு சேர்ந்து மாரடைப்பிற்கு வழிவகுத்துவிடும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிக நார்ச்சத்து உணவுகள்,குறைவான உப்பு மற்றும் குறைந்த கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.யோகா,தியானம்,நடைபயிற்சி,உடற்பயிற்சி போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை செய்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.