உங்களுக்கு கோடை கால தோல் அலர்ஜி பிரச்சனை இருந்தால் கேரட்,பால் உள்ளிட்ட சில பொருட்களை கொண்டு கீழே சொல்லப்பட்டுள்ளபடி பானம் செய்து பருகுங்கள்.கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண் சம்மந்தப்பட்ட பிரச்சனையை சரி செய்கிறது.அசிடிட்டி,வயிறு எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கும் இது மருந்தாக திகழ்கிறது.
தேவையான பொருட்கள்:-
1)கேரட் – ஒன்று
2)ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
3)பசும் பால் – ஒரு கிளாஸ்
4)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி
5)கற்கண்டு பொடி – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதல் படி:
ஒரு தேக்கரண்டி பாதாம் பிசினை கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
இரண்டாவது படி:
கேரட் ஒன்றை எடுத்து தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பீலர் கொண்டு கேரட்டை சீவிக் கொள்ளலாம்.
மூன்றாவது படி:
பிறகு காய்ச்சி ஆறவைத்த பால் ஒரு கிளாஸ் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஏலக்காய் தூள் மற்றும் கற்கண்டு தூள் சொல்லிய அளவுப்படி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நான்காவது படி:
இப்பொழுது கேரட் துருவலை மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்தாக ஊறவைத்த பாதாம் பிசின்,ஏலக்காய் தூள் மற்றும் கற்கண்டு தூள் சேர்த்து கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.
ஐந்தாவது படி:
அடுத்து காய்ச்சி ஆறவைத்த பாலை அதில் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும்.இந்த கேரட் பானத்தை கிளாஸிற்கு ஊற்றி பருக வேண்டும்.பசும் பாலுக்கு பதில் பாதாம் பால் அல்லது தேங்காய் பால் பயன்படுத்தலாம்.
இந்த கேரட் பானத்தை தினமும் பருகி வந்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.தோல் அரிப்பு,தோல் தடிப்பு,தோல் எரிச்சல்,கண் பார்வை பிரச்சனை,நெஞ்செரிச்சல் ஆகிய அனைத்தையும் இந்த கேரட் பானம் குடிப்பதன் மூலம் சரி செய்து கொள்ள முடியும்.