Varicose veins: வெரிகோஸ் வெயினானது பெரும்பாலும் நின்று கொண்ட வேலை செய்பவர்களுக்கு தான் அதிக அளவில் வரும். ஏனென்றால் இவர்களின் நரம்புகள் மீதான ரத்த அழுத்தம் காரணமாக இது உண்டாகுகிறது. இதனால் கடும் கால்வடையை சந்திக்க நேரிடும். குறிப்பாக வெரிகோஸ் வெயின் ஆனது அதிக அளவு உடல் பருமன் கர்ப்ப காலம், மற்றும் புகைப்பிடித்தல் உள்ளிட்டோருக்கும் இந்த பிரச்சனை காணப்படும். இதன் வலியை குணப்படுத்த பெரும்பாலும் மசாஜ் செய்வது நல்லது.
வீட்டு வைத்தியப் படி வெரிகோஸ் வெயினை குணப்படுத்துவது எப்படி?
மஞ்சள்தூள் மற்றும் கற்றாழை:
மஞ்சள் தூள் மற்றும் கற்றாழையை கலந்து நரம்பு சுருள் இருக்கும் இடத்தில் தடவலாம்.
இவ்வாறு செய்யும் பொழுது அதன் வீக்கம் குறையும்.
வல்லாரை டீ அல்லது காபி:
வல்லாரை எடுத்து நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
பின்பு பால் காயும் பொழுது அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
வல்லாரை கொதித்த பாலில் டீ அல்லது காபி தூள் சேர்த்து பருகலாம்.
இந்த முறை இல்லை என்றால் வரக்கொத்தமல்லி வல்லாரை சேர்த்து கூட பருகலாம்.
விளக்கெண்ணை மற்றும் மஞ்சள் தூள்:
விளக்கெண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி வெரிகோஸ் உயிருக்கும் இடத்தில் மசாஜ் செய்யலாம்.
இதனால் நரம்பு தளர்வு ஏற்படும்.
ரத்த ஓட்டம் அதிகரிக்கக்கூடும், இதனால் வெரிகோஸ் வெயின் வீக்கம் வலி குணமாகும்.