நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறு தானியமாக கம்பு உள்ளது.இந்த கம்பு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இதில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த கம்பை சாப்பிட்டு வந்தால் உடல் கொழுப்பு குறையும்.இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க கம்பில் இட்லி,தோசை செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கம்பு – 250 கிராம்
2)வெள்ளை உளுந்து பருப்பு – 150 கிராம்
3)உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம:-
முதலில் கால் கிலோ அளவிற்கு கம்பு எடுத்து கிண்ணத்தில் கொட்டி கொள்ள வேண்டும்.அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி 6 முதல் 7 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.இதற்கு இடையில் 150 கிராம் வெள்ளை உளுந்தை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
கம்பு நன்கு ஊறி வந்த பின்னர் அதன் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு வெள்ளை உளுந்தை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது மிக்சர் ஜார் அல்லது கிரைண்டர் எடுத்து கம்பு மற்றும் வெள்ளை உளுந்து பருப்பை சேர்க்க வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும்.
கம்பு நன்கு அரைப்பட்ட பிறகு இதனை கிண்ணம் ஒன்றில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.இதனை இரண்டு முதல் மூன்று மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் கம்பு மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்க வேண்டும்.10 நிமிடம் காத்திருந்தால் சுவையான ஆரோக்கியமான கம்பு இட்லி ரெடி.இதற்கு தேங்காய் சட்னி,கடலை சட்னிதக்காளி சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.