ஆரோக்கியம் இல்லாத உணவு முறையால் உடலில் படிந்த கொழுப்பை கரைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.
தீர்வு 01:
*இஞ்சி சாறு – 2 மில்லி
*பூண்டு சாறு – 2 மில்லி
*எலுமிச்சை சாறு – 2 மில்லி
*தேன் – 2 மில்லி
முதலில் ஒரு பீஸ் இஞ்சி துண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும.அடுத்து ஒரு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவற்றை தனி தனியாக அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கிண்ணம் ஒன்றில் இஞ்சி சாறு மற்றும் பூண்டு சாறு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து எலுமிச்சை சாறை அதில் பிழிந்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு 2 மில்லி அளவிற்கு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.காலையில் எழுந்த உடன் இப்படி செய்து பருகி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு படியாமல் இருக்கும்.
தீர்வு 02:
*கொள்ளு – 50 கிராம்
*சீரகம் – ஒரு தேக்கரண்டி
*பூண்டு – ஐந்து பற்கள்
*கறிவேப்பிலை – ஒரு கொத்து
*மிளகாய் – ஒன்று
*உப்பு – சிறிதளவு
முதலில் 50 கிராம் கொள்ளு பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஐந்து வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.
அதன் பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் ஒரு வர மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.அதேபோல் சூடான சாதத்தில் இந்த பொடியை கலந்து சாப்பிடலாம்.இவ்வாறு செய்து வந்தால் உடல் கொழுப்பு கரையும்.
தீர்வு 03:
*சுக்கு – ஒரு துண்டு
*மிளகு – 10
*திப்பிலி – 10
முதலில் சுக்கு,மிளகு மற்றும் திப்பிலியை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அரைத்த பொடி 10 கிராம் அளவிற்கு அதில் போட்டு மிக்ஸ் செய்து குடிக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் உடல் கொழுப்பு வெகு விரைவில் கரைந்துவிடும்.