உடலில் பித்தம் குறைய மற்றும் சிறுநீரக கல் பாதிப்பு குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.உடலில் சூடு அதிகரித்துவிட்டால் பித்தமும் அதிகரித்துவிடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் கல்லடைப்பு பாதிப்பை சந்திக்க நேரிடும்.இந்த பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.
சிறுநீரக கல்லடைப்பு அறிகுறிகள்:
**சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம்
**சிறுநீர் கழிக்கும் பொழுது வலி
**இடுப்பு ஓரத்தில் வலி
தேவையான பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் பித்தம் குறையும்.சிறுநீரக கல் பாதிப்பு குணமாக தினமும் ஒரு கிளாஸ்
நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1)நெல்லிக்காய் – ஒன்று
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
ஒரு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து மிக்சர் ஜாரில் இந்த நெல்லிக்காய் துண்டுகளை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்து நெல்லிக்காய் ஜூஸில் கலந்து குடித்தால் கல்லடைப்பு பாதிப்பு குணமாகும்.