உங்கள் உடலில் இருக்கின்ற சூடு தணிய கம்பு மாவில் கூழ்,அடை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுங்கள்.சிறுந்தானிய உணவுப் பொருளான கம்பு குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இந்த கம்பு உணவை சாப்பிட்டால் உடல் சூடு முழுமையாக தணியும்.
தேவையான பொருட்கள்:-
1)கம்பு – 100 கிராம்
2)தயிர் – கால் கப்
3)உப்பு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் 100 கிராம் கம்பை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள்.இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை வடித்துவிடுங்கள்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அடுப்பில் குக்கர் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரைத்த கம்பு பொடியை கொட்டி கெட்டிப்படாமல் கிளற வேண்டும்.
தேவைப்பட்டால் அவ்வப்போது வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.கம்பு நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
கூழ் நன்றாக ஆறியப் பிறகு அதில் கால் கப் தயிர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பருகினால் உடல் சூடு தணியும்.
தேவையான பொருட்கள்:-
1)கம்பு பொடி – 100 கிராம்
2)சின்ன வெங்காயம் – 10
3)சீரகம் – கால் தேக்கரண்டி
4)கறிவேப்பிலை – ஒரு கொத்து
5)உப்பு – சிறிதளவு
6)தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம்:-
50 கிராம் அளவிற்கு கம்பு எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை வெயிலில் பரப்பி மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் பாத்திரத்தில் கம்பு பொடியை கொட்டி கொள்ள வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு கால் தேக்கரண்டி சீரகம்,ஒரு கொத்து நறுக்கிய கறிவேப்பிலையை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கம்பு மாவை பிசைய வேண்டும்.
அடுத்து அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் கம்பு மாவை அடை போல் தட்டி எண்ணெய் சேர்த்து சுட்டு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.