உடல் சூடு குறைய.. காலையில் ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!! சம்மரில் இனி கவலை இல்லை!!

Photo of author

By Divya

உடல் சூடு குறைய.. காலையில் ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!! சம்மரில் இனி கவலை இல்லை!!

Divya

வெயில் காலத்தில் உடல் சூட்டால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உடல் சூட்டை தணிக்க சீரகத்தை உட்கொள்ளலாம்.சீரகம் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் வெயில் காலத்தில் இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.

தீர்வு 01:

1)சீரகம்
2)தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் 10 கிராம் அளவிற்கு சீரகம் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும்
ஊறவிடுங்கள்.காலை நேரத்தில் இந்த சீரக பானத்தை பருகினால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும்.

தீர்வு 02:

1)சீரகம்
2)தேன்
3)தண்ணீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.

இந்த சீரக பானத்தை வடிகட்டி தேன் கலந்து பருகினால் உடல் சூடு முழுமையாக குறையும்.

தீர்வு 03:

1)சீரகம்
2)கற்கண்டு
3)எலுமிச்சை சாறு
4)தண்ணீர்

ஒரு தேக்கரண்டி சீரகத்தை பாத்திரத்தில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

இந்த சீரக பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,கற்கண்டு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து பருக வேண்டும்.இந்த பானத்தை பருகி வந்தால் உடல் குளிர்ச்சி அதிகரிக்கும்.

தீர்வு 04:

1)சீரகத் தூள்
2)தயிர்

ஒரு கிண்ணத்தில் பசுந்தயிர் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி சீரகத் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த தயிரை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தீர்வு 05:

1)நெய்
2)சீரகம்
3)வெள்ளை சாதம்

வாணலியில் நெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.பிறகு வெள்ளை சாதத்தை அதில் போட்டு கிளறி உப்பு கலந்து சீரக சாதமாக சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தீர்வு 06:

1)சீரகம்
2)தண்ணீர்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் சிறிது சீரகம் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த சீரக பானத்தை பருகி வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாகும்.