நவீன காலகட்டத்தில் ஆண்,பெண் அனைவரும் சந்திக்க கூடிய பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் தான்.உடலில் அதிகப்படியான ஊளை சதை இருப்பதால் பல வியாதிகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
ஹோட்டலில் விற்கப்படும் கண்ட உணவுகளை உட்கொள்வது,பகல் நேரத்தில் உறங்குவது,கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வது,சோம்பல் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் உடலில் ஊளைசதை அதிகளவில் உருவாகிறது.ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதும் உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற மூலிகை பானம் தயாரித்து அருந்த வேண்டும்.
ஓம நீர்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு.ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஓமத்தை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.
கொள்ளு நீர்
உடலில் உள்ள ஊளை சதைகளை கரைக்கும் ஆற்றல் கொள்ளு பருப்பிற்கு உண்டு.குக்கரில் 50 கிராம் கொள்ளு பருப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்சர் ஜாரில் கால் தேக்கரண்டி சீரகம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளு பருப்பில் போட்டு சிறிது நேரம் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் நீங்கிவிடும்.
கருஞ்சீரக நீர்
பாத்திரம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாதியாக சுண்டி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இதை ஆறவிட்டு வடிகட்டி பருகி வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.