முடிந்து போன ஆண்மையை கூட மீண்டும் சக்தி பெற வைக்க!! இந்த சூப்பை மட்டும் குடித்து பாருங்கள்!!
தினமும் முருங்கைக்கீரை சூப்பை குடித்து வருவதால் உடலில் ரத்தசோகை ஏற்படாது. இதனால் உடலில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வரலாம். மேலும் உடலில் ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை கீரை சூப் குடிக்க வேண்டும்.
முருங்கைக்கீரை சூப் பெண்கள் தொடர்ந்து 20 அல்லது 25 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் வித்தியாசத்தை உணர முடியும். அந்த அளவுக்கு இந்த முருங்கை கீரை சூப் சத்து மிகுந்தது.
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. ஆஸ்துமா, மார்புசளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும்.
தேவையான பொருட்கள்:
1.முருங்கைக் கீரை – 3 கொத்து
2.சீரகம் – 2¼ ஸ்பூன்
3.மிளகு – 2 ஸ்பூன்
4.உப்பு – தேவையான அளவு
5.கறிவேப்பிலை – 2 கீற்று
6. தண்ணீர் – 8 டம்ளர்
செய்முறை:
முதலில் முருங்கைக் கீரையை அலசி உருவிக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.மிக்ஸியில் மிளகு, சீரகத்தை ஒரு சேர பொடியாக பொடித்துக் கொள்ளவும். குக்கரில் முருங்கைக் கீரை, ½ ஸ்பூன் சீரகம், தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் வைக்கவும். குக்கரில் ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கி விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு சேர நன்கு கிளறவும். பின்னர் தண்ணீரை தனியே வடித்து விடவும். முருங்கைக் கீரையைப் பிழிந்து எடுக்கவும். ஒரு கிண்ணத்தில் முருங்கைக் கீரைச் சாற்றினை எடுத்து அதில் தேவையான உப்பு, பொடித்துள்ள மிளகு சீரகப் பொடி, பிழிந்த முருங்கை இலை ஆகியவற்றைச் சேர்க்கவும். சுவையான முருங்கைக் கீரை சூப்பை குடித்து அதில் உள்ள நன்மைகளை பெற்று மகிழுங்கள்.