நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு முதுகு பகுதியில் பிடிப்பு,வலி போன்றவை ஏற்படுவது இயல்பான விஷயம்தான்.ஆனால் இந்த முதுகுவலி தீவிரமானால் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே முதுகு வலியை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)இலுப்பை எண்ணெய்
2)கற்றாழை துண்டுகள்
செய்முறை விளக்கம்:-
முதலில் 50 மில்லி இலுப்பை எண்ணெய்யை வாணலியில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.இதை அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
பிறகு நான்கு அல்லது ஐந்து கற்றாழை துண்டுகளை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து முதுகில் வலி உள்ள இடத்தில் அப்ளை செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை – ஒன்று
2)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு முழு வெற்றிலை எடுத்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தாளிப்பு கரண்டியில் இந்த வெற்றிலை சாறு ஊற்றி இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி முதுகில் தேய்த்தால் வலி குறையும்.
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர் – தேவையான அளவு
2)காட்டன் துணி – ஒன்று
செய்முறை விளக்கம்:-
முதலில் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.சூடு பொறுக்கும் அளவிற்கு இருந்தால் போதுமானது.
பிறகு காட்டன் துணியை அதில் போட்டு பிழிந்து முதுகில் வலி உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் முதுகு வலி குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)யூக்கலிப்டஸ் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதுகில் வலி உள்ள இடத்தில் யூக்கலிப்டஸ் எண்ணெய் ஊற்றி தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.அதேபோல் நல்லெண்ணெயில் சூடத்தை போட்டு சூடாக்கி முதுகில் ஊற்றி தேய்த்தால் வலி தானாக குறையும்.