நமது உடல் நரம்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டியது முக்கியம்.ஊட்டச்சத்து குறைபாடு,தூக்கமின்மை,சோம்பல் வாழ்க்கை போன்ற காரணங்களால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.அதேபோல் நரம்புகளில் அதிக அழுக்குகள் குவிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.நரம்பு அழுக்குகள் நீங்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு மிளகு – நான்கு
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் நான்கு அல்லது ஐந்து கரு மிளகை லேசாக தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு கால் தேக்கரண்டி அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த கருமிளகு மஞ்சள் பானம் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் நரம்புகளில் குவிந்து கிடக்கும் அழுக்குகள் மற்றும் கொழுப்புகள் கரையும்.
தேவையான பொருட்கள்:-
1)கருந்துளசி இலை – கால் கைப்பிடி
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் கால் கைப்பிடி கருந்துளசி இலைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கருந்துளசி சாறை கிளாஸ் ஒன்றில் வடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பின்னர் அதில் கருந்துளசி சாறை ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் நரம்பு அழுக்குகள் நீங்கும்.நரம்பு அடைப்பு,நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகள் குணமாகும்.