நமது பற்களை சரியாக துலக்கிவிட்டாலோ அல்லது பராமரிக்க தவறினாலோ வெள்ளை நிற பல் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும்.இந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக மாற்ற இந்த பேஸ்டை பயன்படுத்துங்கள்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)ஒரு தேக்கரண்டி சமையல் சோடா
2)ஒரு பீஸ் வெள்ளரி
3)ஒரு பீஸ் கிவி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு துண்டு வெள்ளரிக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு துண்டு கிவி பழத்தை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைக்க வேண்டும்.இந்த பேஸ்டை கொண்டு பல் துலக்கி வந்தால் மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாறும்.
தேவையான பொருட்கள்:-
1)நான்கு கிராம்பு
2)ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா
3)ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றில் இடித்த கிராம்புத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா,ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை கொண்டு பல் துலக்கினால் மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாறும்.
தேவையான பொருட்கள்:-
1)நான்கு பூண்டு பற்கள்
2கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா
பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டுக் கொள்ள வேண்டும்.இதை மைய்ய இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து பற்களை துலக்கினால் மஞ்சள் கறை நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)இரண்டு இலவங்கம்
2)அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு இலவங்கத்தை இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை கொண்டு பல் துலக்கி வந்தால் மஞ்சள் கறை நீங்கும்.