உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் முருங்கையை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.
தீர்வு ஒன்று:
1)ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடி
2)ஒரு தேக்கரண்டி தேன்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு முருங்கை கீரை பொடி போட்டு இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த முருங்கை கீரை பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
தீர்வு இரண்டு:
1)அரை தேக்கரண்டி முருங்கை காய் பொடி
2)ஒரு கிளாஸ் பால்
பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் சிறிது கொதித்து வந்த பின்னர் அரை தேக்கரண்டி முருங்கை காய் பொடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இந்த பாலை கிளாஸிற்கு வடித்து தேன் கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
தீர்வு மூன்று:
1)ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடி
2)ஒரு தேக்கரண்டி நெய்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடியை அதில் போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
தீர்வு நான்கு:
1)ஒரு தேக்கரண்டி முருங்கை பூ
2)ஒரு தேக்கரண்டி தேன்
முருங்கை பூவை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவு முருங்கை பூ பொடி போட்டுக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.