பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்,மாதவிடாய் கோளாறு மற்றும் குறைந்த தாய்ப்பால் சுரப்பு போன்ற பாதிப்புகள் அம்மான் பச்சரிசி இலை மற்றும் அதன் பூக்களை மருந்தாக பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:-
1.அம்மான் பச்சரிசி பூக்கள் – ஒரு தேக்கரண்டி
2.பசும் பால் – அரை கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் அம்மான் பச்சரிசி செடியில் இருந்து பூக்களை சேகரித்து வாருங்கள்.பின்னர் அதனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து இந்த பூக்களை சுத்தமான உரலில் போட்டு மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து அரை கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
அடுத்து அரைத்து வைத்துள்ள அம்மான் பச்சரிசி பூக்களை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.
இந்த பாலை வடிகட்டி தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
வெள்ளைப்படுதல் குணமாக வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)அம்மான் பச்சரிசி இலை – ஒரு தேக்கரண்டி
2)மோர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அம்மான் பச்சரிசி இலையை தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு இதை உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு கால் கிளாஸ் கெட்டி தயிரை மிக்சர் ஜாரில் சேர்த்து முக்கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மோரை கிளாஸிற்கு ஊற்றி அரைத்த அம்மான் பச்சரிசி விழுதை சேர்த்து கலக்கி பருகினால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
நீர்க்கட்டி பிரச்சனை இருப்பவர்கள் அம்மான் பச்சரிசி இலையை காயவைத்து பொடித்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து பருகி வர தீர்வு கிடைக்கும்.பெண்கள் மாதவிடாய் சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வு காண அம்மான் பச்சரிசி இலை பொடியை பயன்படுத்தலாம்.
இது தவிர வயிற்றுப்புண்,முகப்பரு,மரு,வாய்ப்புண் போன்ற பாதிப்புகளுக்கு இந்த அம்மான் பச்சரிசி இலை மருந்தாக திகழ்கிறது.ஆஸ்துமா பாதிப்பு குணமாக அம்மான் பச்சரிசி பொடியை கொண்டு தேநீர் செய்து பருகலாம்.