நமது குடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.எனவே குடல் கழிவுகளை அகற்ற இந்த சிறந்த சித்த வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க.
தீர்வு 01:
சீரகத் தண்ணீர்
செரிமான மண்டலத்தில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்ற தினமும் சீரகத் தண்ணீர் பருக வேண்டும்.உட்கொள்ளும் உணவு செரித்த பின்னர் குடலில் உள்ள கழிவுகள் ஆசனவாய் வழியாக வெளியேற வேண்டும்.
இந்த செயல்முறை நன்றாக நடக்கவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் மொத்தமும் பாதிக்கப்பட்டுவிடும்.இந்த கழிவுகள் நீண்ட நாட்களாக குடலில் தேங்கி இருந்தால் மலச்சிக்கல்,பைல்ஸ்,கேஸ்ட்ரபுள் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
எனவே குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்க உணவு உட்கொள்வதற்கு முன் ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் மற்றும் உணவு உட்கொண்ட பிறகு ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
தீர்வு 02:
விளக்கெண்ணெய்
குடல் ஆரோக்கியத்தை காக்கும் காவலனாக விளக்கெண்ணெய் இருக்கின்றது.விளக்கெண்ணெய் குடித்தால் குடலில் கழிவுகளே தங்காது.நீண்ட நாட்களாக வராமல் அடம் பிடிக்கும் இறுகிய மலக் கழிவுகள் இளகி வெளியேற இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெய் குடிக்க வேண்டும்.இரவில் விளக்கெண்ணெய் குடித்தால் அதிகாலை நேரத்தில் மலம் வெளியேற்ற தானாக தூக்கம் தெளிந்துவிடும்.
தீர்வு 03:
லெமன் சாறு
குடலை சுத்தப்படுத்துவதில் எலுமிச்சையின் பங்கு இன்றியமையாதது.இந்த எலுமிச்சம் பழத்தின் சாறை வெது வெதுப்பான தண்ணீர் கலந்து குடித்தால் மலக் கழிவுகள் சீக்கிரம் வெளியேறிவிடும்.வெறும் வெது வெதுப்பான தண்ணீரை இரவில் குடித்தாலே காலையில் மலக் கழிவுகள் முந்திக் கொண்டு வெளியேறும்.
தீர்வு 04:
உப்பு
ஒரு கப் சூடான தண்ணீரில் சிறிது கல் உப்பு போட்டு கரைக்க வேண்டும்.இந்த தண்ணீரை குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் நாள்பட்ட கழிவுகள் முற்றிலும் வெளியேறிவிடும்.