இன்று பெரும்பாலானவர்கள் பசியின்மை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்.
பசியின்மைக்கான காரணங்கள்:-
1)கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள்
2)மன அழுத்தம்
3)மன உளைச்சல்
தேவையான பொருட்கள்:-
1.கறிவேப்பிலை கொழுந்து – சிறிதளவு
2.வேப்பங்கொழுந்து – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
**முதலில் கறிவேப்பிலை கொழுந்து மற்றும் வேப்பங்கொழுந்தை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
**பின்னர் இவற்றை தண்ணீர் கொண்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
**இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது நேரம் தண்ணீரை சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு சுத்தம் செய்து வைத்த வேப்பங் கொழுந்து மற்றும் கறிவேப்பிலை கொழுந்தை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
**பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.தொடர்ந்து இரண்டு மூன்று தினங்கள் பருகி வந்தால் நன்றாக பசியெடுக்கத் தொடங்கும்.
மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1.எலுமிச்சை – ஒன்று
2.மிளகுத் தூள் – 5 கிராம்
3.சுக்குத் தூள் – 5 கிராம்
4.உப்பு – 5 கிராம்
5.நாட்டு சர்க்கரை – 5 கிராம்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதை நடுவில் இருந்து நான்கு பாகுதியாக நறுக்க வேண்டும்.
பிறகு ஐந்து கிராம் அளவிற்கு மிளகுத் தூள்,ஐந்து கிராம் சுக்குத் தூளை எலுமிச்சைக்குள் போட வேண்டும்.
அதன் பின்னர் ஐந்து கிராம் உப்பு மற்றும் ஐந்து கிராம் சர்க்கரையை அதில் போட்டு நாள் முழுவதும் ஊற விட வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் இரும்பு வாணலி வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து எலுமிச்சையை அதில் வைத்து குறைந்த தீயில் வதக்க வேண்டும்.அதன் பின்பு அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த எலுமிச்சை ஆறிய பிறகு அதன் சாறை மட்டும் வாயில் வைத்து உறிஞ்சி குடிக்க வேண்டும்.இப்படி செய்தால் நன்றாக பசி எடுக்கும்.செரிமானப் பிரச்சனை,கல்லீரல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.