உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!!

Photo of author

By Divya

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!!

இந்த பரிகாரத்தை செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையில் மட்டும் தான் செய்ய வேண்டும். காலை 6 லிருந்து 7, மதியம் 1றிலிருந்து 2, இரவு 8 லிருந்து 9 இந்த மூன்று நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம்.

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:-

*சிறிய கண்ணாடி பவுல்
அல்லது
மண் குடுவை

*கல் உப்பு – சிறிதளவு

*கரு மிளகு – 27

இந்த பரிகாரத்தை செய்ய கல் உப்பு, கரு மிளகு இரண்டையும் புதிதாக வாங்கி பயன்படுத்துவது நல்லது. முதலில் சிறிய கண்ணாடி பவுல் அல்லது மண் குடுவையை எடுத்து அதில் கல் உப்பை நிரப்பிக் கொள்ளவும்.

பின்னர் அதில் 27 கருமிளகை ஒவ்வொன்றாக வைக்க வேண்டும். இதை மொத்தமாக வைக்கக் கூடாது.அப்படி வைக்கும் பொழுது நீங்கள் யாரிடம் கடன் பெற்று இருக்கிறீர்கள்? எவ்வளவு கடன் பெற்றிருக்கிறீர்கள்? என்பதை சொல்லி அந்த கடன் விரைவில் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு வைக்க வேண்டும்.

தன் பிறகு மீண்டும் இந்த கல்லுப்பையும் மிளகையும் உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறைக்கும் சென்று சிறிது நேரம் நின்று உங்களுடைய கடன் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு மறுபடியும் வந்து இந்த பவுலில் கல் உப்பையும் மிளகையும் கொட்டி அதை பூஜை அறையில் அப்படியே வைத்து விடுங்கள்.

15 நாட்கள் வரை இவை உங்கள் பூஜை அறையில் இருக்க வேண்டும். அதன்பிறகு இந்த கல்லுப்பையும் மிளகையும் கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்த அடுத்த 15 நாட்களுக்குள் நீங்கள் வாங்கிய கடனிலிருந்து ஒரு பகுதியாவது திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பு நிச்சயம் வரும். 15 நாள் கழித்து மறுபடியும் இதே போல் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கடன் பிரச்சனை முழுமையாக நீங்கி விடும்.