உங்களது உடல் சோர்வு நீங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க இந்த நான்கு வீட்டு வைத்தியங்களில் ஒன்றை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வால்நட் – நான்கு
2)பாதாம் பருப்பு – நான்கு
3)சியா விதை – ஒரு தேக்கரண்டி
4)உலர் திராட்சை – ஐந்து
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றை எடுத்து நான்கு வால்நட்,நான்கு பாதாம் பருப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சியா விதை மற்றும் ஐந்து உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
8 முதல் 10 மணி நேரம் நன்றாக ஊறவைத்த பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் பால் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.இந்த பாலை குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தய விதை – இரண்டு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி வெந்தய விதை போட்டு ஊறவைக்க வேண்டும்.
வெந்தயம் நன்கு ஊறி வந்த பிறகு வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பூசணி விதை – இரண்டு தேக்கரண்டி
2)ஆளிவிதை – ஒரு தேக்கரண்டி
3)சூரியகாந்தி விதை – ஒரு தேக்கரண்டி
4)எள் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றில் பூசணி விதை இரண்டு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆளிவிதை,ஒரு தேகர்ந்து சூரியகாந்தி விதை மற்றும் ஒரு தேக்கரண்டி எள் சேர்த்து நன்றாக ஊறவைக்க வேண்டும்.
இதை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் எழுந்ததும் மென்று சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வலிமை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பச்சை பயறு – ஒரு தேக்கரண்டி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் பச்சை பயறு ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.இவற்றை முளைகட்ட வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.