என்றும் இளமையாக இருக்க.. செம்பு பாத்திர நீரில் சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்க!!

Photo of author

By Divya

என்றும் இளமையாக இருக்க.. செம்பு பாத்திர நீரில் சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்க!!

Divya

நம் பாரமப்பரிய முறைப்படி செம்பு அதாவது காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகினால் பல நன்மைகள் கிடைக்கும்.நமது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த செம்பு பாத்திர நீர் பருகலாம்.

காப்பர் பாத்திரத்தில் உள்ள நீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து பருகினால் உடலுக்கு இன்னும் அதிகளவு நன்மைகள் கிடைக்கும்.ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் தூள் தண்ணீரில் நன்றாக கலந்த பிறகு பருக வேண்டும்.இப்படி தினமும் செம்பு தண்ணீரில் மஞ்சள் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மஞ்சள் கலந்த செம்பு பாத்திர நீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:-

1)மூளை செயல்பாட்டை அதிகரிக்க செம்பு பாத்திரத்தில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம்.மூளை நரம்புகள் வலிமை அதிகரிக்க ஞாபக சக்தி அதிகரிக்க இந்த நீரை பருகலாம்.

2)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சள் கலந்த நீர் பருகலாம்.மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

3)சருமப் பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு இருக்கின்றது.இந்த மஞ்சளை தண்ணீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவாக மாறும்.

4)மஞ்சள் கலந்த நீரை பருகினால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை சரியாகும்.அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் இந்த மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.

5)உடலில் தொற்றுக்கள்,பூஞ்சை,வைரஸ் போன்றவை நீங்க மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.வயிற்றில் தேங்கிய கழிவுகளை அகற்ற மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.

6)குடலில் ஏற்படும் வீக்கம் குறைய மஞ்சள் கலந்த நீர் பருகலாம்.கரும்ப்புள்ளிகள்,வடுக்கள் மறைய மஞ்சள் கலந்த தண்ணீர் பருகலாம்.