பரீட்சைக்கு ஆர்வமுடன் படிக்க.. படித்தது மறக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!

Photo of author

By Divya

பரீட்சைக்கு ஆர்வமுடன் படிக்க.. படித்தது மறக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!

Divya

தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் ஞாபகத் திறனை அதிகரிக்க,படிப்பில் ஆர்வம் அதிகரிக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ் இதோ.

டார்க் சாக்லேட்

தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிட்டால் ஞாபக திறன் அதிகரிக்கும்.டார்க் சாக்லேட் மூளை செயல்திறனை மேம்படுத்தும் என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.

தண்ணீர்

தேர்வுக்கு படிக்கும் குழந்தைகள் நீர்ச்சத்து குறைபாட்டை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.அதேபோல் தயிர்,மோர் போன்ற குளிர்ச்சி நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும்.

பழங்கள்

ஆப்பிள்,ஆரஞ்சு,திராட்சை,அத்தி போன்ற பழங்களை ஜூஸாக அரைத்து பருக வேண்டும்.உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.டீ,காபி போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்.காபி மூளைக்கு நல்லது என்றாலும் அதில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

காய்கறி மற்றும் கீரைகள்

பாகற்காய்,வல்லாரை,வெண்டைக்காய் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.அதேபோல் உலர் பாதாம் பருப்பை உட்கொள்ள வேண்டும்.கால்சியம் சத்து நிறைந்த பாலை உட்கொள்ளலாம்.

மூச்சு பயிற்சி

தினமும் 15 நிமிடங்கள் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.சிறிது நேரம் சூரிய ஒளியில் நடக்கலாம்.காலை நேரத்தில் 15 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகள்

சால்மன்,மத்தி போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த மீன்களை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ஞாபகத் திறன் அதிகரிக்கும்.

புரத உணவுகள்

பாதாம் பருப்பு,முட்டை போன்றவற்றில் புரதம் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த புரத உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

மஞ்சள்

பசும் பாலில் மஞ்சள் கலந்து பருகினால் நினைவாற்றல் பெருகும்.மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஞாபகத் திறன் மேம்படும்.