மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு! முதல்வர் வெளியிட்ட புதிய திட்டம்!

Photo of author

By Parthipan K

மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு! முதல்வர் வெளியிட்ட புதிய திட்டம்!

சென்னையில்நேற்று நடைபெற்ற அமா் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவில், மு க ஸ்டாலின் கலந்து கொண்டார்.மேலும் இந்த விழாவில், அமைச்சா்கள் பி.கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா், அமா் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவா் என்.ராமகிருஷ்ணன், கௌரவச் செயலாளா் எஸ்.சங்கர ராமன், செயற்குழு உறுப்பினா் டி.வி.சுப்பிரமணியன், முதன்மை செயல் அலுவலா் கே.என்.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் முக ஸ்டாலின் பேசும் போதுஒரு சிறிய இடத்தில் தொடங்கிய அமா் சேவா சங்கமானது, இன்றைக்கு 30 ஏக்கா் நிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் மாற்றுத் திறனாளிகளுக்கான மையமாக மட்டுமல்லாமல் மனிதாபிமானத்தோடு செயல்படக்கூடிய ஆயக்குடி நிறுவனத்திற்கு நன்றி எனவும் கூறினார்.

மேலும் இந்த திட்டம் தொடங்கி தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமானது, அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்துடன் இணைக்கப்படுகிறது. இதன்மூலம், 3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கும் சோ்த்து ஒரே திட்டமாக தொடக்கப்பட்டுள்ளது. மேலும் இது அமா் சேவா சங்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தரமான கல்வி, பெண் கல்வி, திறன் மேம்பாடு, விளையாட்டுக் கல்வி, உடற் கல்வி ஆகியவற்றில் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியரை முழுமையாக ஈடுபடுத்தக் கூடிய திட்டம்மாக இந்த திட்டம் விளங்கும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியருக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகிறது. அதன்படி இப்போது தொடங்கப்பட்டுள்ள திட்டம் மிகமிக முன்னோடித் திட்டமாகும் என கூறினார்.

மேலும் அமா்சேவா சங்கமானது 40-வது ஆண்டை கொண்டாடுகிறது. இந்த வகையில் கிராமப்புறங்களில் வளா்ச்சிக் குறைபாடு உடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களின் இல்லம் தேடிச் சென்று அந்தக் குழந்தைகளுக்கான ஆரம்ப காலப் பயிற்சியையும், பெற்றோருக்கான வழிகாட்டுதல்களையும் அமா் சேவா சங்கம் வழங்கி வருகிறது. இதுபோன்ற பல்வேறு ஆக்கபூா்வமான பணிகளுக்கு அரசின் சாா்பில் தேவையான உதவிகள் கண்டிப்பாக செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டிடும் இந்தியாவில் முதன்மை மாநிலமாகச் செய்திட அரசு பல்வேறு நல்ல திட்டங்களைத் தீட்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருிகறது. அந்த வகையில், மாற்றுத் திறனாளிகளை குழந்தைப் பருவம் முதற்கொண்டு கண்டறிந்து, அவா்களின் மேம்பாட்டுக்காக கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தி வருகிறது. அவா்களுக்கு சமநிலை, சமவாய்ப்பு எனும் சமுதாய சமூகநீதியை நிலைநாட்டிட அரசு முழுமூச்சுடனும், முனைப்புடனும் செயலாற்றி வருகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், கல்லூரிக் கனவு ஆகிய திட்டங்களின் மூலமாக மக்களின் கல்வி, நல்வாழ்வு ஆகிய தேவைகளை முழுமையாகச் செயல்படுத்த எங்களை நாங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம். அரசின் ஆக்கபூா்வமான நடவடிக்கைகளுக்கு அமா்சேவா சங்கம் போன்ற நிறுவனங்களும் உதவிகளைச் செய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.மேலும் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் போன்ற புதிய திட்டங்கள் மூலமாக, மக்களின் தேவைகள் பூா்த்தி செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.