இந்த படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு!நாளை வெளியாக உள்ளது தரவரிசை பட்டியல்!
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் விளையாட்டு வீரர்கள் ,மாற்றுத்திறனாளி ,முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ள ஒதுக்கீடு ஆகிய சிறப்பு பிரிவினருக்கும் நடைபெற உள்ளது. அதன் பிறகு பி இ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் அதற்கு 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் அவர்களின் கட்டணம் சான்றிதழ் பதிவேற்ற நகலை முழுமையாக விண்ணப்ப பதிவை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநீதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டு பி இ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் 55 முதல் 60 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவிக்கப்பட்டு ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 627 வீட்டை இடங்களும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 900 இடங்களிலும் அரச மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பத்தாயிரம் இடங்களும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் வளாக கல்லூரிகளில் உள்ள 200 இடங்களும் பி ஆர் படிப்பில் 106 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.
மேலும் நான்கு கலந்தாய்வில் 434 பொருளியல் கல்லூரிகள் இடம்பெறும் எனவும் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகிறது. கடந்த 2010 ஆண்டு முதல் முறையே கல்லூரிகளின் எண்ணிக்கை 509, 480, 471, பொறியியல் கல்லூரிகள் என ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது அதன்படி நடப்பாண்டில் கல்லூரிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் இணைய பாதுகாப்பு மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் உள்ளிட்ட வளர்த்து வரும் பகுதிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதித்துள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை இடங்கள் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது மட்டும் அல்லாமல் நடப்பாண்டில் 18 பொறியியல் கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் அந்த கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்க வருகிறது. மேலும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட கல்லூரிகள் உரிய விளக்கம் அளிக்காத நிலையில் குறிப்பிட்ட கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.