போலி பத்திரத்தை வைத்து நில அபகரிப்பு செய்தவர்களுக்கு விரைவில் வருகிறது புதிய ஆப்பு! சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கிய குடியரசுத் தலைவர்!

0
85

மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்கான அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தத்தால் கோவில் நில அபகரிப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு ஆவணங்களை பதிவு செய்ய துணை போகும் சார்பதிவாளர்கள் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒருவருடைய சொத்தை அவருக்குத் தெரியாமல் போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள்மாறாட்டம் மூலமாகவும், வேறு நபர்கள் விற்பனை செய்யும் மோசடி சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன, இதில் தொடர்புடைய சொத்துக்கள் தொடர்பான மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்யும் விஷயத்தில் பொதுமக்களை சார் பதிவாளர்கள் கடுமையாக அலைக்கழித்து வந்தார்கள் எனவும், சொல்லப்படுகிறது.

இதற்கு தீர்வாக பதிவு சட்டத்தில் ஒரு சில திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த திருத்தத்துக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்திருக்கிறது. இதனடிப்படையில் மோசடியாக பதிவு செய்யப்பட்டது என்பதற்கான சரியான ஆதாரங்களை சொத்தின் உண்மையான உரிமையாளர் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மோசடி பத்திரத்தை ரத்து செய்யலாம்.

இதில் மோசடி பத்திரத்தை பதிவு செய்வதும் அதற்கு எதிராக புகார் கலை விசாரிக்க மறுப்பதும் என்று சொத்து அபகரிப்பாளருடன் கூட்டு சேர்ந்து செயல்படும். சார் பதிவாளர்களுக்கு 3 வருடம் வரையில் சிறை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, குடியரசு தலைவர் ஒப்புதலினடிப்படையில் இந்த திருத்தங்கள் உடனடியாக அமல்படுத்தப்படும். பொதுவாக இது போன்ற புதிய சட்டங்கள், சட்ட திருத்தங்கள், அது நிறைவேற்றப்பட்ட நாளை அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தப்படும் தற்போது மோசடி பத்திரங்களை பதிவு செய்தது குறித்தும், அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்தது குறித்தும், 100 புகார்கள் விசாரணையிலிருக்கின்றன.

இதில் தொடர்புடைய சார்பதிவாளர்கள் தற்காலிக பணி நீக்கத்திலிருக்கிறார்கள். இதில் புகார் தாரர்கள் மறுபடியும் புகார் வழங்கினாலும், விசாரணை அதிகாரி நினைத்தாலும், புதிய சட்ட திருத்தத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆகவே அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்தவர்கள், கோவில் நிலங்களை பதிவு செய்தவர்கள், நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களின் மோசடி பத்திரங்களை பதிவு செய்தவர்களை சிறைக்கு அனுப்புமளவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.