பாகிஸ்தான் தூதரத்துக்கு இந்திய அரசு 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே எல்லை பிரச்னை அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. தற்போது ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புக்கு விசா பிரிவில் பணியாற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர் அபீத் ஹூசைன் மற்றும் தாஹிர்கான் இவர்களது நடவடிக்கைகள் குறித்து சந்தேகமடைந்த டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறை அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தது.

பாகிஸ்தான் தூதரத்துக்கு இந்திய அரசு 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு
pakistan and india flags painted over cracked concrete wall

இதையடுத்து நேற்று இரவு அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்துள்ளனர் விசாரணையில் இவர்கள் இருவரும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு பார்த்தது தெரியவந்து உள்ளது.

இதை அடுத்து அவர்கள் இருவரும் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது இதையடுத்து அந்த இருவரும் நாட்டை வெளியேற உள்ளனர்.

இந்த தகவலை பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.