நறுமணம் நிறைந்த புதினாவில் பலவகை உணவுகள் தயாரிக்கப்படுகிறது.பசட்னி,துவையல்,சாதம் என்று புதினாவின் செய்யப்படும் உணவுகள் அனைத்தும் ருசியாக இருக்கும்.புதினாவில் டீ அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
இயற்கையாக குளிர்ச்சி நிறைந்து காணப்படும் புதினா தலை முதல் பாதம் வரையிலான பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.புதினா இலைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
தினமும் காலை நேரத்தில் புதினா இலைகளை சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
புதினா கொண்டிருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
**மெக்னீசியம் **போலேட் **இரும்புச்சத்து **வைட்டமின் சி **ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் **வைட்டமின் ஏ
புதினா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1)வாய் துர்நாற்றப் பிரச்சனை சரியாக வெறும் வயிற்றில் புதினா சாப்பிடலாம்.புதினாவை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல் சொத்தை துர்நாற்றம் கட்டுப்படும்.
2)அஜீரணக் கோளாறு நீங்க காலையில் வெறும் வயிற்றில் இரண்டு புதினா இலைகளை மென்று சாப்பிடலாம்.
3)ஆஸ்துமா பிரச்சனை சரியாக புதினா இலைகளை கொதிக்க வைத்து பருகலாம்.தோல் அலர்ஜி பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
4)உடலில் யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க புதினா இலையை சாப்பிடலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க புதினா டீ செய்து பருகலாம்.
5)காய்ச்சல்,தொண்டை பிரச்சனை நீங்க புதினா இலைகளை மென்று சாப்பிடலாம்.ஜலதோஷ பிரச்சனைக்கு சிறந்த நிவாரணமாக இது திகழ்கின்றது.
6)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க புதினா பானம் செய்து பருகலாம்.புதினா இலைகளை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் பிரச்சனை சரியாகும்.
7)தலைவலியை போக்க புதினா இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுங்கள்.உடல் சூட்டை தணிக்க புதினா ஜூஸ் செய்து குடிக்கலாம்.
8)மன அழுத்தம் குறைய புதினா இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.புதினா இலைகளை சாப்பிடுவதால் மன அமைதி பெருகும்.
9)குமட்டல் பிரச்சனை சரியாக புதினா இலைகளை மென்று சாப்பிடலாம்.வாந்தியை கட்டுப்படுத்த புதினா லெமன் கொண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம்.
10)உடல் சோர்வு பிரச்சனை உள்ளவர்கள் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள புதினா ஜூஸ் செய்து பருகலாம்.