மேற்கு வங்கத்தில் தொடங்கியது ஆறாவது கட்ட தேர்தல்! வரலாறு காணாத பாதுகாப்பு!

Photo of author

By Sakthi

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் ஆணையம்.அதன்படி இதுவரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும், அசாம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சென்ற ஆறாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று வரையில் ஐந்து கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்து இருந்தது.

இந்த சூழ்நிலையில், இன்று அங்கே ஆறாவது கட்ட சட்டசபை தேர்தல் ஆரம்பமானது மேற்குவங்க மாநிலத்தில் இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலின் போது வன்முறைகள் எதுவும் நடந்து விடாமல் இருக்கும் பொருட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளிலும் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதை தவிர பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக 37 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 23 பேரும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 12 பேரும் களம் காண இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.