தொடர்ந்து சரியும் தங்கவிலை!! இன்றே வாங்கிட ஆர்வம், இல்லத்தரசிகள் விறுவிறுப்பு!!

Photo of author

By Jayachithra

தொடர்ந்து சரியும் தங்கவிலை!! இன்றே வாங்கிட ஆர்வம், இல்லத்தரசிகள் விறுவிறுப்பு!!

Jayachithra

இல்லத்தரசிகளுக்கு அணிகலன்கள் என்றாலே கொள்ளை பிரியம். அதிலும் தங்க நகைகளை நிறைய வைத்திருப்பது அவர்களுக்கு பெருமையளிப்பதாக உணர்வார்கள். தங்கக்கை நகை சேமிப்பானது வருமானம் இல்லாத காலங்களில் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவும் என்றாலும் கூட பல வகையில் ஆபரணங்கள் சேமிப்பு ஆபத்தானதாக இருக்கக்கூடும்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை மிக அதிகமாக தங்கம் வைத்துள்ள மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கின்றது. இத்தகைய நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் அதிகமாக காணப்படும்.

சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் இன்றைய தங்கம் விலையில் மிகவும் குறைந்த அளவிலேயே வித்தியாசம் காணப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர துவங்கியது. மேலும், கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் சமீபகாலமாக நிலவி வந்தன.

இத்தகைய சூழலில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இறங்கு முகத்தில் இருக்கின்ற தங்க விலை இன்றும் குறைந்திருக்கின்றது. தற்போது சவரன் ரூ.36000க்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், நேற்று சவரனுக்கு ரூ.129 உயர்த்தப்பட்டு ரூ.35,640-க்கு விற்கப்பட்டது.

அந்த வகையில், இன்று இன்று சென்னையில் தங்கம் விலையில் மாற்றம் எதுவுமில்லாமல் ஒரு கிராமின் விலை ரூ.4,446க்கும், ஒரு சவரனின் விலை ரூ.35,560க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி சில்லறை வர்த்தகத்தில் ரூ.73.50க்கு விற்கப்பட்டு வருகின்றது.