சிங்கமென களமிறங்கும் எதிர்க்கட்சித் தலைவர்! நடுநடுங்கும் ஆளும் தரப்பு!

Photo of author

By Sakthi

எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவரைப் பார்த்து ஆளும் தரப்பு சற்று பயந்து கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் அவருடைய முந்தைய செயல்பாடுகள் அந்த அளவிற்கு இருந்தது. எதிர்க்கட்சியாக இருந்த திமுக கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிப்பது சிலநேரம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்களை வாயடைக்கச் செய்தது போன்ற செயல்கள் இன்றுவரையில் திமுகவின் உடன்பிறப்புகளின் மனக்கண்ணில் தோன்றி மறைகிறது.

இப்படி புத்திசாலியான ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாம் ஆட்சியில் இருந்தாலும் கூட அது நமக்குத்தான் கேடாக வந்து முடிக்கும் என்று திமுக நினைத்ததன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவராக வரப்போவது இபிஎஸ் அவர்களா? ஓபிஎஸ்அவர்களா? என்ற பிரச்சனை அதிமுகவில் சென்றுகொண்டிருந்த சமயத்தில் திமுக ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது. இருந்தாலும் திமுகவினர் தந்திரத்தை புரிந்து கொண்ட அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை எதிர்க்கட்சித்தலைவராக தேர்ந்தெடுத்தது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் விடுபட்டு இருந்த திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சென்ற 15ஆம் தேதி ஆரம்பித்து நேற்று மாலையுடன் முடிவடைந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இன்றைய தினம் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி ஒரு அணியாகவும் அதிமுக பாரதிய ஜனதா கட்சியை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றது. இன்றைய தினம் மாலையில் இருந்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரங்களை தொடங்க இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களுக்கு நேரில் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, அத்துடன் அந்தப் பகுதியில் இருக்கின்ற தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவற்றை அவரே நேரடியாக செய்ய இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.