திமுகவா? அதிமுகவா? வேலூர் கோட்டை யாருக்கு? கடந்து வந்த பாதை ஒரு அலசல்!

0
152

திமுகவா? அதிமுகவா? வேலூர் கோட்டை யாருக்கு? கடந்து வந்த பாதை ஒரு அலசல்!

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 இன்று நடைபெற உள்ளது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சை ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்தனர்..

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சி உறுப்பினர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் O பன்னீர்செல்வம்  என அனைவரும் இந்த தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரத்தின் போது திமுகவை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி நாட்டிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல் எங்களை ஊழல் கட்சி என்று சொல்கிறார் ஸ்டாலின் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

வாரிசு அரசியல் செய்யும் அவருக்கு என்ன தெரியும். கட்சிக்குத் தலைவராக வருவதைத் தான் நாங்கள் வாரிசு அரசியல் என்று சொல்கிறோம். கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்.அவருக்குப் பிறகு உதயநிதி. இவர்களை விட்டால் நாட்டில் வேறு ஆளே இல்லையா?

உதயநிதியை நான்கு படத்தில் விளம்பரத்துக்காக நடிக்கவைத்து கட்சிக்குள் நுழைத்திருக்கிறார். ஸ்டாலினை நம்பி எங்களிடமிருந்து வெளியே சென்ற 18 எம்.எல்.ஏ-க்களும் நடுத் தெருவில் நிற்கிறார்கள். 

தி.மு.க-வினர் எல்லோரும் குண்டு குண்டாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் பிரியாணி, பரோட்டா எல்லாம் காசு கொடுக்காமல் ஓசியில் சாப்பிடுகிறார்கள். பணம் கேட்டால், ஹோட்டல் உரிமையாளரை குத்து குத்துனு குத்துகிறார்கள். இவர்கள் எங்களை விமர்சனம் செய்வதா?

இதை தொடர்ந்து திமுகவும் அதிமுகவை விமர்சித்தது. திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் போது நாங்கள் பொய் அறிக்கை குடுத்து வெற்றி பெற்றோம். ஆனால் நீங்க மிட்டாய் கொடுத்தா வெற்றி பெற்று இருக்கிறீர்கள். முத்தலாக் சட்டத்திற்கு ஆதரவு கோரியது அதிமுக அரசுதான் என்றும், ஆதிமுக பிஜேபியின் கை கூலி என்றும் விமர்சனம் செய்தார்.

இதை தொடர்ந்து இன்று வேலூர் தொகுதியில் தேர்தல் காலை தொடங்க உள்ளது. வெற்றி பெறுவது அதிமுகவா? திமுகவா? என்பது பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleஹிந்தியிலும் வெல்லப்போகும் விஜய் சேதுபதி! வெற்றி படத்தின் வெற்றி தொடருமா?
Next articleஇனி கஷ்மீர் இல்லையா? கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ஏன் ரத்து? நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?