இன்றுடன் முடிகிறது.!! உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம்.!!

0
187

உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்டமாக நடைபெற உள்ள பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோம்பர் 6,9 தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிதுள்ளது.

மேலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஒன்பது மாவட்டங்களில் 23,998 பதவிகளை கைப்பற்ற, 79,433 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் முதற்கட்டமாக அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தொடர்பில்லாத நபர்கள் யாரும் வெளியேற கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அந்த பகுதிகளில் இன்று டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Previous articleவிவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி!
Next articleஇன்னும் மூன்று மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் முக்கியத் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!