இன்றைய (05-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு லாபம் .? யாருக்கு வெற்றி .?

0
285

இன்றைய (05-10-2021) ராசி பலன்கள்

மேஷம்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய வியாபாரம் தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்

உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நுட்பங்களை அறிந்து கொள்ளும் நாள்.

மிதுனம்

குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சனைகளை அறிந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களின் அனுசரிப்பும், ஆறுதலும் மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். நன்மைகள் உண்டாகும் நாள்.

கடகம்

எந்தவொரு செயலையும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான விரயங்கள் ஏற்படும். செய்யும் செயலுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்

உறவினர்களின் வழியில் ஆதரவான பலன்கள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சம வயதினரின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்களை கவனத்துடன் மேற்கொள்வது நல்லது. அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.

கன்னி

தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவு பெறும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சல்களும், புதிய அனுபவங்களும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மாற்றமான சிந்தனைகளும், முதலீடுகளும் ஏற்படும். சகிப்புத் தன்மை அதிகரிக்கும் நாள்.

துலாம்

எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மற்றும் தெளிவு பிறக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சஞ்சலங்களும், குழப்பங்களும் உண்டாகும். திடீர் யோகம் கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பணி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகமும், பயணங்களும் சுபிட்சத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்துவந்த செயல்பாடுகளை செய்து முடிப்பீர்கள். கீர்த்தி அதிகரிக்கும் நாள்.

தனுசு

ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் ஆர்வமும், அதற்கான உதவிகளும் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். தந்தைவழி உறவினர்களின் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சுறுசுறுப்பான நாள்.

மகரம்

குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய செயல்பாடுகளில் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். செல்வாக்கு மேம்படும் நாள்.

கும்பம்

கல்வி தொடர்பான பணிகளில் மனக்குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களிடம் அதிக நேரம் உரையாடுவதை குறைத்துக்கொள்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் சார்ந்த கோப்புகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள்.

மீனம்

நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் நிலையில் புதிய பொலிவுடனும், புத்துணர்வுடனும் காணப்படுவீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பரிசுகள் கிடைக்கும் நாள்.

 

Previous articleவாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன?
Next articleசென்னையை தோற்கடித்து முதலிடம் பிடித்த டெல்லி அணி.!!