இன்றைய (06-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வெற்றி.! யாருக்கு அதிஷ்டம்.!!

0
216

இன்றைய (06-10-2021) ராசி பலன்கள்

மேஷம்

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான பணிகளில் விருப்பங்கள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.

ரிஷபம்

சம வயதினரின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் வேகமின்றி விவேகத்துடன் செயல்படவும். பூர்வீகத்தால் மேன்மை அடையும் நாள்.

மிதுனம்

எதிர்பார்த்த சில காரியங்களில் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். கலகலப்பான நாள்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெற்றிகள் கிடைக்கும் நாள்.

சிம்மம்

வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளுக்கு உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்களின் மீதான ஆசைகள் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

கன்னி

மனதில் சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. முடிவுகளில் தடுமாற்றம் உண்டாகும் நாள்.

துலாம்

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அலுவலக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுதந்திர தன்மையுடன் செயல்படுவீர்கள். முதலீடுகள் அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோக பணிகளில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப பெரியவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணியவை ஈடேறும் நாள்.

தனுசு

வாழ்க்கைத்துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புத்திரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மாற்றங்கள் நிறைந்த நாள்.

மகரம்

உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்வது நல்லது. உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். லாபம் அதிகரிக்கும் நாள்.

கும்பம்

நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோக பணிகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். உணர்ச்சி வேகம் மேம்படும் நாள்.

மீனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு வியாபாரத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புதிய கனவுகள் உண்டாகும் நாள்.

Previous articleஇந்திய ஆட்சி பணியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர்: குமாரசாமி
Next articleதமிழகம் முழுவதும் நாளை கோவிலைத் திறக்க பாஜக போராட்டம்.!!