எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 09.08.2020

Photo of author

By Kowsalya

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 09.08.2020

நாள் : 09.08.2020

தமிழ் மாதம்: ஆடி 25 ஞாயிற்றுக்கிழமை.

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 08.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை.

இராகு காலம்:

மதியம் 4.30 முதல் 6 வரை

எம கண்டம்:

காலை 12.0 முதல் 01.30 வரை

குளிகன்:

பகல் 3.00 முதல் 4.30 வரை

திதி:

இன்றைய தினம் முழுவதும் தேய்பிறை சஷ்டி திதி

நட்சத்திரம்:

ரேவதி காலை 7.06 மணி வரை அதன் பின் அஸ்வினி.

அமிர்தயோகம் இரவு 07.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. இன்று சஷ்டி விரதம். இன்று முருக வழிபாடு செய்வது நல்லது.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். சகோதரர்களால் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு. பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும் நாள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதாரம் அற்புதமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி பெருகும். உறவினர்களுடன் இருந்த வந்த பகை விலகும். முன்னேற்றமான நாள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பாதியில் நின்ற பணிகள் இன்று முடிவடையும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை வரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் வரும் . ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உறவினர்கள் உதவ உதவிக்கரம் நீட்டுவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் ஏற்படும். கையிருப்பு குறையும். பண தட்டுப்பாட்டை குறைக்க சிக்கனத்துடன் செயல்படுங்கள். ஆரோக்கியமான நாள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் வெளியிடங்களில் அமைதி காப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன உளைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் பிறரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உங்களுக்கு கெடுதலையே தரும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேற போகிறது. சுபகாரிய பற்றிய பேச்சுக்கள் நற்பலனை தரும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆசை நிறைவேற போகும் நாள்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் அகலும். வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் பெருமை வீடு வந்து சேரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு உங்கள் வாழ்வில் மேம்பட நல்ல முடிவை எடுப்பீர்கள். பயணங்கள் அலைச்சல் தரும். வீட்டில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதால் வீண் கவலையை தவிர்க்கலாம். வண்டி வாகனங்களால் செலவு ஏற்படும். அலைச்சல் தரும் நாள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஒரு சில தொந்தரவுகள் வரும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் பல பிரச்சினைகளில் இருந்து வெளிவரலாம். அமைதியான நாள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. புதுபொலிவுடன் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த நற்பலன் உண்டு. சுப காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ஆதரவு பெருகும் நாள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களுடன் அனுசரித்துப் போங்கள் மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. தொழில் தொடர்பாக செல்லும் பயணங்களில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது. அனுசரித்துப் போக வேண்டிய நாள்.

மீனம்

இந்த ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சுபகாரிய பேச்சுக்கள் வீடு வந்து சேரும். சுபச் செய்தி கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சந்தோஷமான நாள்.