பல் வலி இருக்கா? கிராம்புடன் இதை சேர்த்து சாப்பிட 5 நிமிடத்தில் வலி காணாமல் போய்விடும்!

0
63

பல் வலி இருக்கா? கிராம்புடன் இதை சேர்த்து சாப்பிட 5 நிமிடத்தில் வலி காணாமல் போய்விடும்!

இன்றைய சூழலில் அனைவருக்கும் ஏற்படும் ஒரு வலி என்றால் அது பல் வலி. பல் வலி வந்தவர்களுக்கும் தான் தெரியும் அதனுடைய வலி எப்படி இருக்கும் என்று. ஆனால் அக்காலத்தில் நம் முன்னோர்கள் ஆலம் குச்சி, வேப்பங்குச்சி போன்றவையில் பல் துலக்கினார்கள். ஆனால் நாம் பலவித கெமிக்கலை கொண்ட பேஸ்ட் கொண்டு பல் துலக்கி வருகிறோம். இதனால் பலவிதமான நோய்கள் பரவுகின்றன.

இப்பொழுது ஐந்தே நிமிடத்தில் எப்படி பல்வலி, பல் வீக்கம், பல்லில் ரத்தம் வருதல் ஆகியவற்றை தீர்க்கலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கொய்யா இலைகள் 4 ,5

2. கிராம்பு – 5

3. தண்ணீர்

செய்முறை:

1.முதலில் 200 மில்லி தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து சுட வைக்கவும்.

2. தண்ணீர் கொதித்தவுடன் 5 கொய்யா இலைகளை போடவும்.

3. அதனுடன் 4 கிராம்பை போடவும்.

4. தண்ணீர் நன்கு கொதித்து நிறம் மாறும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

5. தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

 

இப்பொழுது இந்த தண்ணீரை ஆறியபின் இளம் சூட்டில் இருக்கும் பொழுது வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்து தண்ணிரை வெளியே துப்பி விடுங்கள்.

இது போல அந்த 200 மில்லி லிட்டர் தண்ணீரையும் நான்கைந்து முறை கொப்பளித்து வெளியே துப்பி விடுங்கள்.

இதனை செய்யும்பொழுது ஐந்தே நிமிடத்தில் பற்களில் ஏற்படும் வலியானது மறைந்து போகும். மேலும் பற்களில் உள்ள வீக்கமும் சரி, இரத்தம் கட்டுதல் ஆகியவை சரியாகிவிடும்.

 

கொய்யா இலைகளில் இல்லாத சத்துக்களே கிடையாது. இலைகளில் அதிக மெக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நீரிழிவு நோய்களிலிருந்து பல்வேறு அனைத்து விதமான நோய்களுக்கும் பயன்படுகின்றது.

வெளியில் தங்கி தொழில் செய்வோர், படிப்பவர்கள் இதனை செய்ய முடியாது என்பதனால் கொய்யா இலையை எடுத்து நசுக்கி அந்த சாறுடன் 2 கிராம்பை வைத்து நசுக்கி உருண்டை போல் செய்து அதை வாயில் அடக்கிவைத்து அந்த சாற்றை துப்பலாம் அல்லது விழுங்கலாம். அது உங்களுடைய விருப்பம். இவ்வாறு செய்தாலும் பல் வலி உடனடியாக மறையும்.

author avatar
Kowsalya