எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 03.08.2020

Photo of author

By Kowsalya

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 03.08.2020

நாள் : 03.08.2020

தமிழ் மாதம்: ஆடி 19 திங்கட்கிழமை.

நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

ராகு காலம்:

7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: 

காலை 10.30 மணி முதல் 12 மணி வரை.

திதி:

பவுர்ணமி திதி இரவு 9.28 வரை அதன் பின் தேய்பிறை பிரதமை திதி.

நட்சத்திரம்:

உத்திராடம் காலை 7.19 மணி வரை அதன் பின் திருவோணம்.

மரணயோகம் காலை 07.19 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆவணி அவிட்டம். பௌர்ணமி விரதம் ஆகும்.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள்.பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் லாபம் வர வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக புதிய கருவிகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணி புரியும் ஊழியர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக கிடைக்கும். அதே போல் வந்த பணம் செலவு அடையும்.குடும்பத்தாருடன் சற்று பொறுத்துபோங்கள். அவர்களைப் பொறுத்து போவதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனை குறையும்.தொழில் ரீதியான பேச்சுவார்த்தைகள் சுமூகத்தில் முடியும். வாக்கு வாதத்தை குறைக்கும் நாள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே இன்று நீங்கள் மிகவும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த செயல் செய்தாலும் அதில் நிதானத்தை கடைபிடியுங்கள். வெளி நபர்களிடம் பேசாமல் இருப்பது நன்மை பயக்கும்.கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள் அவர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது.குழப்பமான நாள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களே இன்று நீங்கள் மிகவும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். திருமணப் பேச்சுகள் கைகூடும். சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுக்கள் அனுகூலத்தைத் தரும்.வேலை செய்பவர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் உயர்வு கிடைக்கும்.தொழில் போட்டிக்கு இடையே நீங்கள் எப்பொழுதும் வெற்றி காண்பீர்கள். அனுகூலம் பெறும் நாள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பண வரவு தட்டுப்பாடின்றி வந்து சேரும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும் நாள். பிள்ளைகளால் பெருமை வர வாய்ப்புள்ளது.வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. பழைய கடன் தானாகவே வந்து சேரும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாக வரும். அதனால் செலவை கட்டுப்படுத்தவும்.உறவினர்களுடன் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம். அவர்களால் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது.செய்யும் வேலைகளில் உங்களுக்கு எந்த மரியாதையும் கிடைக்காது.வேறு தொழில் சம்பந்தமான முயற்சிகள் எடுக்கும் பொழுது உங்களுக்கு அனுகூலத்தைத் தரும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

துலாம்:

துலா ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும் சிந்தியுங்கள். சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உங்களை தானே வந்து சேரும்.சொந்தத் தொழில் செய்யும் நபர்களுக்கு தொழிலில் மந்தமான சூழ்நிலை நிலவும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணத்தை கட்டுப்படுத்தலாம்.உற்றார் உறவினர்கள் தேடி வந்து உதவி வழங்குவார்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்கள் பொருளாதாரம் மேலோங்கும்.ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சீராகும். தொழிலில் இருந்து வந்த போட்டிகள் விலகும். ஆரோக்கியமான நாள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இன்று நீங்கள் கவனமாக செயல்படுங்கள்.நண்பர்களாக இருப்பவர்கள் பகையாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தள்ளி வையுங்கள். அலுவலகத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து போவதால் பிரச்சனைகள் வராது. கவனமாக இருக்கும் நாள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு குடும்பத்தின் மூலம் சுப நிகழ்வுகள் கைகூடும். சகோதர சகோதரியின் ஆதரவு கிடைக்கும்.அலுவலகங்களில் அவரவர் திறமைக்கு ஏற்றபடி பதவி உயர்வு கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீக வழிபாடு அதிகரிக்கும். உயர்வு பெறும் நாள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இன்று நீங்கள் குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து சென்றால் வீட்டில் அமைதி நிலவும். பண நெருக்கடி ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் முதலில் சிந்தியுங்கள் அப்புறம் செயல்படுத்துங்கள். சிந்தனை மேலோங்கும் நாள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே இன்று உங்களுடைய மதிப்பு பன்மடங்கு உயரும். கடினமான காரியத்தை கூட எளிதில் முடிக்கும்  திறன் பெற்றவர் ஆவீர்கள். துணிச்சலுடன் செயல்பட்டு எளிதில் காரியத்தை முடிப்பீர்கள். தொழிலில் வியாபாரிகளை சேர்த்துக் கொள்வதால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பு பிறக்கும் நாள். குடும்பத்தில் ஆதரவு பெருகும். மதிப்பு உயரும் நாள்.