இன்றைய ராசிபலன்- 13.08.2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 13.08.2020

நாள் : 13.08.2020

தமிழ் மாதம்:

ஆடி 29 வியாழக்கிழமை.

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை.

இராகு காலம்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை.

 எம கண்டம்:

காலை 06.00 முதல் 07.30 வரை.

குளிகன்:

பகல் 9.00 முதல் 10.30 வரை,

திதி:

நவமி திதி பகல் 12.59 வரை பின்பு தேய்பிறை தசமி.

நட்சத்திரம்:

ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 05.22 வரை பின்பு மிருகசீரிஷம்.

நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஸ்ரீ சனி ஜெயந்தி. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்றைய நாள்கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளுக்கு வேறு அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். சுபச் செலவுகள் உங்களை தேடி வரும். பற்றாக்குறைகள் இருந்தாலும் வெற்றிகரமாக சமாளித்து முன்னேறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் ஒற்றுமை இருக்கும்.கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மனமகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.அதிக அலைச்சல் இருந்தாலும் அவற்றால் ஆதாயமும் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே சொந்தத்தொழில் செய்பவர்கள் பல புதிய தொழில் வாய்ப்புகளை காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெற்றிகரமான நாள் ஆகும். பல நாட்களாக முடிவடையாத முக்கியமான வேலைகள் அனைத்தையும் இன்று முடித்து விடுவீர்கள். இதனால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்:

சிம்மம் ராசிக்காரர்களே இன்று கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். செயல்திறன் அதிகரிக்கும் நாள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள்
வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வது உங்களை சோர்வடைவதில் இருந்து பாதுகாக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.
உயர் கல்வியை நோக்கி இருக்கும் மாணவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் முயற்சிகள் மேலும் சிறிதளவு காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையை காண்பார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே இன்றைய நாள் சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறை கூறி கொண்டிருக்காமல் உங்களை மாற்றி கொள்ள பாருங்கள். பண விஷயத்தில் சாக்குபோக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் பல நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும் நாளாகும். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க வைக்கும். பிரயாணங்களை பற்றி சிந்திப்பீர்கள்.
கல்வியில் மேன்மையான நிலையை மாணவர்கள் அடைவார்கள். உயர் கல்வியை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள்உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் குடும்பத்தில் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் நாள் ஆகும். உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். புது வேலைக்கான முயற்சி கை கூடி வரும். வீடு வாகன செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும், வெற்றியடையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் மிகச்சிறந்த முன்னேற்றத்தைக் கொடுக்கும் நாளாக இருக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும்.கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும், செலவுகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. ஆகவே வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும்.