இதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? யாரெல்லாம்  சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

0
135

இதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? யாரெல்லாம்  சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

இதன் பெயர் சப்ஜா விதைகள் என்று கூறுவார்கள். இது திருநீற்று பச்சிலை என்ற இலையில் இருந்து வருவதால் இதனை துளசி விதைகள் என்று கூறுவார்கள். இதனை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது நிச்சயமாக உடல் எடை குறையும்.ஆனால் யார் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

ஒரு சிலர் சியா விதைகளையும் மற்றும் சப்ஜா விதைகளையும் ஒன்று என நினைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள் அப்படி சாப்பிடும் பொழுது உங்களுக்கு உடல் எடை கூடுமே தவிர குறையாது.

உடல் எடை குறைய:

1.முதலில் சப்ஜா விதைகளை அரை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது அது நன்றாக ஊறியிருக்கும்.

2.அதனுடன் தண்ணீர் சேர்த்து எலுமிச்சம் பழ ஜூஸை சேர்த்து மற்றும் தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து எந்த வேலையிலும் குடிக்கலாம். இவ்வாறு நீங்கள் சாப்பிட்டு வரும்பொழுது உங்களுக்கு பசி தன்மை குறையும். அதனால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.

நெஞ்செரிச்சல் குணமாக:

ஊறவைத்த சப்ஜா விதைகள் உடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடித்து வர நெஞ்சு எரிச்சல் அடங்கும்.

இதனை குடித்து வந்தால் ஓரளவு உடல் குறைவதை நீங்கள் காணலாம்.

யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது:

இந்த சப்ஜா விதைகள் பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை பாதிப்பதால் இதனை பெண்கள் அதிகமாக குடிக்க கூடாது. வாரத்திற்கு இரண்டு முறை குடித்தால் போதும். மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை பருகக்கூடாது. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் போதுமானது.

மேலும் ஆண்கள் இந்த சப்ஜா விதைகளை சாப்பிட்டு வரும் பொழுது உடல் எடை மளமளவென குறையும்.

 

 

 

author avatar
Kowsalya