இந்த வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அந்த அறிவின்படியே கடந்த சில தினங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது அதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.
கடந்த வாரம் கனமழை அதிகம் பெய்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்,இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆறு மணிநேரத்தில் 44 செ.மீ மழை கொட்டியது. அதனால் சீர்காழி முழுவதும் வெள்ளக்காடாக தீவு போல் காட்சி அளித்தது.
மேலும் மயிலாடு துறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அதனை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நேற்று சீர்காழி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆனால் இன்று மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் சீர்காழி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மற்ற மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.