தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள் இன்று ! அவரைப் பற்றிய பதிவு!
தீரன் சின்னமலை என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு பெரும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுள்ளார். இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்று அனைவருக்கும் தெரிந்ததே.
தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை போராடி வென்றவர் தீரன் சின்னமலை. 1801- ல் ஈரோட்டில் உள்ள காவிரிக் கரையிலும், 1802 -ல் ஓடாநிலையிலும், 1804 -ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி வென்றார். ஆங்கிலேயர்களை திக்குக்கு ஒரு பக்கமாக திசை மாற்றி அனுப்பி வைத்தார்.
அதுமட்டுமில்லாமல் 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையில் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தலைவரான கர்னல் மேக்ஸ்வெல் என்பவரை மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
சின்னமலையை போரில் நம்மால் வெற்றிபெற இயலாது என்று அறிந்த ஆங்கிலேயர்கள் வஞ்சகமாக விசாரணை என்ற பெயரில் அவரை சங்ககிரி கோட்டைக்கு அழைத்துச் சென்று ஜூலை 31, 1805 ஆம் ஆண்டு தூக்கிலிட்டனர்.
சமீபத்தில் தபால்துறை இவரது முகம் பதித்த அஞ்சல் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு தமிழக அரசால் அவர் தூக்கிலிடப்பட்ட சங்ககிரியில் இவருக்கு நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
கிண்டியில் உள்ள அவரது சிலை புதுப்பிக்கப்பட்டு அவரது வரலாற்றுப் பதிவுகள் வாழ்க்கை வரலாறுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் வேகமும் மன தைரியமும் கொண்ட தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.