1945-ம் ஆண்டு ஆறாம் தேதி ஜப்பானின் மீது ராட்சஸ குண்டு ஒன்று வீசப்பட்டது.இதனால் 1.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 75 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் , இன்று அவர்களுக்கு நினைவு அஞ்சலி செழுத்தப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பான் மீது போர் தொடுத்தது.அப்போது அமெரிக்கா தனது வலிமையை காட்ட ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டை வீசியது.
இந்த குண்டுக்கு ‘லிட்டில் பாய்’ எனப் பெயர் சூட்டியிருந்தனர். அதற்கு காரணம் முந்தைய அதிபர் யவ்டி ரூஸ்வெல்ட்டைக் (FDR) குறிக்கும்வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டதாகத் தெவிக்கப்பட்டது. 12-15 ஆயிரம் டன் டி.என்.டி.,வெடிபொருள் சக்தியை கொண்டிருந்த அந்த அணுகுண்டு யாரும் எதிர்பாராதவிதமாக அதிகாலையில் வழக்கம்போல செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் காலை 8:15 மணியளவில் B-29 என்ற விமானத்திலிருந்து வீசப்பட்டது.அந்த அணுகுண்டால் 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை நாசம் செய்தது.
அணுகுண்டின் கதிர்வீச்சால் உடல் எரிந்து,கண் தோல் போன்ற பகுதிகள் எரிந்து நிலையிலும், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உயிர் இழந்தனர். இந்த அணுகுண்டால்,விழுந்த இடத்திலிருந்து 500 அடி சுற்றளவில் இருந்த அனைவரும் உடனடியாக உயிரிழந்தனர். ஹிரோஷிமாவில் இருந்த கட்டடங்கள் உடைந்து சிதைந்தன. இந்த குண்டு வீச்சில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்திருந்தது. ஆனால், ஹிரோஷிமாவில் வசித்த 3,50,000 பேரில் 1,40,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என பின்னர் கணக்கிடப்பட்டது.
இந்த அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சினால் பலர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். லருக்கு உடல் ஊனமடைந்தது.
அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலுக்கு பின் , நாகசாகி என்னும் பகுதியின் மீது மீண்டும் அணுகுண்டு வீச தொடங்கியது.இதில் 74,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.இரண்டு அணுகுண்டுகளை வீசப்பட்ட பின், 1945 ஆக்ஸட் 8ம் தேதி சோவியத் ரஷ்யா,ஜப்பான் மீது போர் தொடுக்க ஆயத்தமானது. இரண்டு குண்டுகள் வீசப்பட்ட ஜப்பான் வலுவிழந்த நிலையில் உலக நாடுகளிடம் சரணடைய முன்வந்தது.இதயைடுத்து அதே மாதம் 14ம் தேதி நேச நாடுகளிடம் சரணடைந்தது ஜப்பான்.சரணடைந்த பின் ஆசியாவில் உலகப்போர் முற்றிலும் முடிவுக்கு வந்தது.ஆனால் அமெரிக்க கடற்படை தாக்குதலின் மூலமாக தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைய முன்பே முடிவெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.