மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள்! விண்ணப்பிப்பது எப்படி?

0
237

மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள்! விண்ணப்பிப்பது எப்படி?

 

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முன்னுரிமை அளித்து நிறைவேற்றி வருகிறார்.

 

அந்த வகையில் கடந்த 05.09.2022 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால்‌ புதுமை பெண்‌ திட்டம்‌ தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

தற்போது இந்த திட்டத்தின் கீழ் https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணவிகளும்‌ விண்ணப்பிக்கலாம்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தகுதியான மாணவிகள்‌, அனைவரும்‌ சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‌ வாயிலாக இன்று மாலை வரை பதிவு செய்யலாம்‌ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெற மாணவிகள் அரசு பள்ளிகளில்‌ படித்திருக்க வேண்டும்.அவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியான நபர்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கும் மாணவிகள்‌ தங்கள்‌ கல்வி நிறுவனங்கள்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பம்‌ செய்ய வேண்டும்‌, நேரடியாக விண்ணப்பிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

 

இத்திட்டதின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ முறை மற்றும்‌ தகுதி வரம்பு குறித்து அறிந்து கொள்ள வசதியாக அனைத்து மாணவிகளுக்கும்‌ கல்வி பயிலும்‌ நிறுவனங்களில்‌ சிறப்பு முகாம்கள்‌ நடைபெறும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தகுதியான மாணவிகள்‌ இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தவறாமல்‌ அவர்களுடைய ஆதார்‌ அட்டை மற்றும்‌ (கல்வி மேலாண்மை தகவல்‌ திட்ட எண்ணுக்காக EMIS NO) மாற்றுச்‌ சான்றிதழ்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.

 

மேலும்‌, தற்போது 2,3, மற்றும்‌ 4 ஆம்‌ ஆண்டுகளில்‌ படிக்கும்‌ கல்லூரி மாணவிகள்‌, முதற்கட்டத்தில்‌ இத்‌திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்க தவறியவர்கள்‌ தற்போது விண்ணப்பிக்கலாம்‌ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும்‌, விண்ணப்பம்‌ பூர்த்தி செய்யும்‌ முறையில்‌ மாணவிகளுக்கு சந்தேகங்கள்‌ ஏதும்‌ இருப்பின்‌, சமூக நல இயக்குனரக அலுவலகத்தில்‌ மாநில அளவில்‌ செயல்படும்‌ உதவி மையத்தினை திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை, காலை 10 மணி முதல்‌ 5 மணி வரை 9150056809, 9150056805, 9150056801 மற்றும்‌ 9150056810 எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

 

மேலும்‌ தகவல் அறிய விரும்பினால் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல்‌ அனுப்பலாம்‌, முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ தகுதிவாய்ந்த மாணவிகள்‌ அனைவரும்‌, விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleசெலவே இல்லாமல் சிறுநீர் கல் கரைய எளிய டிப்ஸ்! உடனே டைப் பண்ணுங்க!
Next articleஉங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here