ஐஐடியில் சேர மாணவர்களுக்கு இன்று கடைசி நாள்!! தொழிற்பயிற்சி நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் மாணவர்கள் சேர்க்கை இன்று வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
அந்த தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 தொழில் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்பயற்சி நிலையத்தின் மூலம் பல மகளிர்களுக்கு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து சுய தொழில் தொடங்கும் அளவிற்கு பயற்சி அளிக்கபடுகிறது.
மேலும் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அதனை தொடர்ந்து இந்த பயற்சியில் சேரும் மாணவிகள் மற்றும் மகளிருக்கு உதவித்தொகை 750 ரூபாய், இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, பாட புத்தகங்கள், காலணிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வாங்கி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதனையடுத்து கூடுதல் விவரங்களை பெற 044-222510001, 8248738413 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிந்துக்கொள்ளலாம்.
அதையடுத்து கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர உதவி மையத்தை அணுகலாம். சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையத்தில் பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான ஆவணங்கள் மதிப்பெண் சான்று, ஜாதி மற்றும் மாற்று சான்று, ஆதர அட்டை, பாஸ்போர்ட் அளவில் ஐந்து புகைப்படம் ஆகியவை தேவை என்றும் தெரிவித்துள்ளது.