கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Photo of author

By Parthipan K

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்து சமீபத்தில் அதன் தேர்ச்சி மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியானது.பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் தங்களது கல்லூரி படிப்புகளை தொடங்க ஏதுவாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியது.
கடந்த ஆண்டு பொறியியல் படிப்பு மேற்கொள்பவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அவர்கள் சேர விரும்பும் கல்லூரிகளை அந்தந்த மாவட்ட அரசு பொறியியல் கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.அதேபோன்று அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்காமல், ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.

அதன்படி மாணவர்கள் அவர்கள் விரும்பும் பாடங்களை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்று காரணமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடக்கவிருந்த மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளதால், கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவ -மாணவிகள் தங்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் .அதற்கு இன்றே கடைசி நாளென தற்பொழுது கூறியுள்ளது.

இதுவரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யாதவர்கள்,தங்கள் சான்றிதழ்களை www.tngasa.in என்ற இணைதளத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்படுகிறது.