சென்னையில் உள்ள பி ஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்தவர்கள் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிப்ரவரி 5 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைப்பவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முதல்வர் மருந்தகமானது அமைக்க இருப்பதாகவும் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைக்கும் பி.பார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முதல்வர் மருந்தகம் அமைக்க அரசினுடைய www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படியும் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்த அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கான விதிமுறைகள் :-
✓ 110 சதுர அடிக்கும் குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருத்தல் வேண்டும்.
✓ வாடகை இடம் என்றால் அந்த இடத்தினுடைய சொந்தக்காரரிடம் ஒப்பந்த பத்திரம் போட்டு அதனையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
✓ சொந்த இடமாக இருந்தால் அந்த இடத்தினுடைய மின் இணைப்பு ரசீது, குடிநீர் ரசீது மற்றும் சொத்து வரி ரசீது விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு அரசு தரப்பிலிருந்து மானியமாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மருந்தாகத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு முதல் மானியமாக ரூ.1.5 லட்சம் ரூபாய் முதலில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின், முதல்வர் மருந்தகத்தில் அமைக்கப்பட இருக்கும் செல்ஃபுகள் மற்றும் ஏசி பிரிட்ஜ் போன்றவற்றிற்கு மீதம் இருக்கக்கூடிய ரூ.1.5 லட்சம் ரூபாய் விடுவிக்கப்படும் என்றும் தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது.