இன்று வாழ்வா.? சாவா.? என்ற முக்கிய போட்டியில் மும்பை vs ராஜஸ்தான் அணிகள்.!!

0
236

இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 51-வது லீக் போட்டி ஷார்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இன்றைய தினம் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு அதிகம், தோல்வி அடையும் அணி வெளியேறும். அதன் காரணமாக, இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்குநேர்,

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை 12 போட்டிகளிலும், ராஜஸ்தான் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லை.

Previous articleசென்னையை தோற்கடித்து முதலிடம் பிடித்த டெல்லி அணி.!!
Next articleதொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here