தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

0
148

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

இதனையடுத்து இன்றும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.

அதன்படி, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை செய்யலாம் எனவும், அரியலூர் பெரம்பலூர், சேலம், ஈரோடு, கோவை, தர்மபுரி ஆகிய ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 5 மற்றும் 6ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை மழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous articleஇன்றைய ராசி பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்.? யாருக்கு லாபம்.? யாருக்கு புதுமை.?
Next articleஜெய்ஸ்வால், துபே அதிரடி ஆட்டம்.! சென்னையை பந்தாடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.!!