இன்று தொடங்குகிறது பருவமழை: இந்த 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!

Photo of author

By Pavithra

இன்று தொடங்குகிறது பருவமழை: இந்த 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!

Pavithra

இன்று தொடங்குகிறது பருவமழை: இந்த 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!

வட தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்றும்,தமிழகத்தில் இன்று முதல் பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை மையம் கடந்த இரு தினங்களுக்கு முன்பே அறிவித்திருந்தது.

அதன்படி இன்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகத்தின் கீழ்க்கண்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

தென்காசி தேனி தூத்துக்குடி சிவகங்கை புதுக்கோட்டை மயிலாடுதுறை ராமநாதபுரம் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் கடலூர் விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் மீதமானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.