தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை:! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!
அந்தமான் ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று அக்டோபர் 20 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.பிறகு இந்த தாழ்வு பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து பின்பு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்,பின்பு இது புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகம்,கேரளா,புதுச்சேரி,ஆந்திரா,மகாராஷ்டிரா,ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை உள்ளது.
மேலும் நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் கீழே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு மீதமானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் தேனி திண்டுக்கல் ஈரோடு சேலம் கடலூர் பெரம்பலூர் அரியலூர் நாமக்கல் கரூர் தஞ்சாவூர் திருச்சி புதுக்கோட்டை மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் ராமநாதபுரம் விருதுநகர் மதுரை சிவகங்கை கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமானது முதல் இடி மின்னலனுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.