அறிமுகமானது எல்ஐசியின் தன் வர்ஷா பாலிசி! இவ்வளவு சலுகைகளா?

0
97

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தன்னுடைய வர்ஷா என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்குகிறது.

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, பல்வேறு காப்பீடு திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்பாட்டில் வைத்திருக்கிறது. சொற்றேற குறைய அனைத்து வயதுடைய மக்களுக்கும் காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளதால், இது மிகவும் பிரபலமான வழியாக இருக்கிறது.

எல் ஐ சி பாலிசியில் முதலீடு செய்வது என்பது குறைந்த அளவிலான அபாயம் கொண்டதாகவும் உத்தரவாதமான வருமானத்தை பெறுவதற்கான வழிமுறையாகவும் இருக்கிறது. இது ஒரு சேமிப்பு முறையாக இருப்பதால் பல இந்தியர்கள் எல்ஐசியில் சேமிப்பு கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்த விதத்தில் முதலீட்டாளர்களை கவரும் வகையில் எல்ஐசி நிறுவனம் புதிய பாலிசி திட்டத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. எல் ஐ சி சார்பாக தன் வர்ஷா எனும் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என்று இரு அம்சங்களையும் சேர்த்து வழங்குகிறது இந்த திட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் வர்ஷா பாலிசி பாலிசி எண் 866 திட்டம் பல சலுகைகளை வழங்குகிறது வாரிசு எடுத்தவர் எதிர்பாராமல் இறந்துவிட்டால் நிதி உதவி கிடைக்கும். அவரின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் நிதி ரீதியாக பிரச்சனை ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யும் பாலிசி முதிர்வு காலத்திலும் ஒரு கணிசமான தொகை கிடைக்கும். 3 வயது முதல் 60 வயது வரையில் இருப்பவர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம். இந்த பாலிசிக்கான குறைந்தபட்ச முதிர்வு வயது 18 அதேபோல அதிகபட்ச முதிர்வு வயது 75 இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச உறுதி தொகையாக 1.25 லட்சம் கிடைக்கும்.

இந்த பாலிசியை இணையதளத்தில் எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன கூடுதல் விவரங்களுக்கு எல்ஐசி ஆன்லைன் தளத்தை பார்க்கவும் அல்லது உதவி எண் 9102268276827 என்ற எண்ணுக்கு அழைத்தும் தகவல்களை பெறலாம்.